சென்னை: ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான ‘அலா போலேலோ’ வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, வித்யா பாலன் உள்ளிட்டோரும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வெளியான முதல் பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். அனிருத் பாடியுள்ள இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கொண்டாட்டமான சூழ்நிலையில் பாடல் அமைந்திருந்தாலும், ரஜினி கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் ஒரு தேடலை நோக்கி செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
