சீக்கிய மதத்தின் முதல் குருவான குருநானக் தேவ் ஜியின் பிறந்தநாள் விழா நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு பீகார், உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருநானக் ஜெயந்தி அல்லது பிரகாஷ் புரப் நாளில் சீக்கியர்கள் குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர்.
குரு கிரந்த் சாஹிப் பாராயணம், கீர்த்தனைகள், ஊர்வலங்கள் மற்றும் லங்கர் எனப்படும் பொதுவான உணவு வழங்கும் நிகழ்ச்சிகள் முக்கிய அம்சங்களாக உள்ளன.
சமத்துவம், மனிதநேயம், சேவை மற்றும் இறைநம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்தும் குருநானக்கின் போதனைகளை நினைவுகூரும் வகையில் இந்த விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
