By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்! மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை
    1 Min Read
    டிரம்ப் – ஜி – ஜின்பிங் – புதின் சந்திப்பு! உலக அரசியலில் புதிய திருப்பம்
    1 Min Read
    போலந்து வானில் ரஷ்ய ஏவுகணைகள்! நேட்டோ நாடுகள் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    தொழில்நுட்பப் பங்குகள் சரிவு; அமெரிக்க சந்தையில் அதிர்ச்சி
    0 Min Read
    உக்ரைனுக்கு நேட்டோ பாதுகாப்பு உறுதி திட்டத்தை ரஷ்யா நிராகரித்தது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சபரிமலை தரிசன முன்பதிவில் மோசடி? அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார்
    1 Min Read
    ஓவைசிக்கு தவறான மரியாதை! உத்தரபிரதேச காவல்துறையில் சர்ச்சை
    0 Min Read
    தொகுதி மறுவரையறைக்கு 25 ஆண்டு தடை வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    1 Min Read
    மேக் இன் இந்தியா மீது ஜெய்ராம் ரமேஷ் தாக்கு! இறக்குமதி சார்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு
    1 Min Read
    ராகுல் காந்தி விமர்சனம்! பாஜக பதிலடி – வெளிநாட்டு அரசியல் பேச்சு விவாதம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்
    0 Min Read
    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி
    0 Min Read
    புத்தக கொள்முதல் முறைகேடு புகார் – தமிழகத்தில் விசாரணை கோரிக்கை தீவிரம்
    1 Min Read
    நோயற்ற வாழ்வு வாழ வரம் தரும் வரகரிசியில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் உளுந்து!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பட்டுப்புடவைகளின் தரம்… எப்படி வாங்குவது? உங்களுக்காக சில டிப்ஸ்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பட்டுப்புடவைகளின் தரம்… எப்படி வாங்குவது? உங்களுக்காக சில டிப்ஸ்
தமிழகம்

பட்டுப்புடவைகளின் தரம்… எப்படி வாங்குவது? உங்களுக்காக சில டிப்ஸ்

Nagaraj
Last updated: August 24, 2026 2:28 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: பட்டுப்புடவை எல்லா பெண்களுக்கும் பிடித்தமான பாரம்பரிய உடை. பாரம்பரியத்தை விரும்பும் அனைத்து பெண்களும் பட்டுப் புடவையை கட்டாயம் விரும்புவார்கள். ஆனால் இந்த பட்டுப் புடவையின் விலை சற்று அதிகம். இதனால் தரமான பட்டுப் புடவையை நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். திருமண காரியங்களுக்கு பட்டுப் புடவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. திருமண வீடுகளில் பட்டுப் புடவை இன்றி திருமணம் நடைபெறாது.

பார்ப்பதற்கு ஒரே மாதிரியான பட்டுப் புடவையின் விலை, கடைக்குக் கடை வேறுபடும். அதனால், பட்டின் தரம் குறித்து எப்போதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். நகையில் கலந்திருக்கும் தங்கத்தைப் போலவே, பட்டுப் புடவையின் தரத்தைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் குழப்பங்கள் ஏற்படும். ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பட்டுபோல ஜொலிக்கிறது என்பார்கள். ஆனால், பளபளப்பது எல்லாம் நல்ல பட்டுப் புடவை அல்ல. அதனால், வெறும் பளபளப்பை மட்டுமே கருத்தில்கொண்டு புடவையை தேர்ந்தெடுக்க முடிவு செய்யக்கூடாது. பட்டு நூலின் விலை, தயார் செய்வதற்கான கூலி உட்பட செலவுகள் அதிகம். அதனால், ரொம்பவும் மலிவான விலையில் பட்டுப் புடவைகள் தருவதாகச் சொன்னால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏனெனில், சிலர் 2,000 ரூபாய்க்கும் குறைவாகப் பட்டுப் புடவையின் விலையைக் கூறுவார்கள். ஆனால், மிகக் குறைந்த அளவு நல்ல பட்டு நூல் கொண்டு தயாரித்த பட்டுப் புடவை என்றாலும் குறைந்தபட்சம் 3,500 ரூபாய்க்குத்தான் விற்க முடியும். இதேபோல, நிறைய டிசைன் உள்ள புடவைக்கு விலையை மிகக் குறைத்துச் சொன்னாலும், அதன் தரம் பற்றி சந்தேகம்கொள்ள வேண்டும்.

சிலர், டிசைனை வைத்து பட்டுப் புடவைக்கு பெயர்கள் வைத்திருப்பார்கள். ஆனால், என்ன பெயர் வைத்தாலும் பட்டு நூல் தரம் ஒன்றுதான். அதனால், பெயரை மட்டும் வைத்து, பட்டின் தரத்தை முடிவு செய்யக்கூடாது. பட்டு என்பது நான்கு வகைகள்தான். மல்பெர்ரி வகைகளே நம் பகுதியில் அதிகம் கிடைக்கக்கூடியது.

பட்டுப் புடவையின் அளவுகளைச் சோதித்து வாங்குவது நல்லது. பொதுவாக, புடவையின் நீளம் சராசரியாக ஐந்தரை மீட்டரும் ஜாக்கெட்டுக்கு 70 சென்டிமீட்டரும் ஆக, 6.20 மீட்டர் இருக்க வேண்டும். அகலம் 47 முதல் 50 இன்ச் இருக்கும். நீளம், அகலம் குறைவான புடவைகளும் விற்பனை செய்யப்படலாம். எனவே, கவனத்துடன் இருப்பது நல்லது.

ஜரிகையில் பிளாஸ்டிக், ஆஃப் ஃபைன், ப்யூர் அல்லது சில்வர் என மூன்று வகைகள் இருக்கின்றன. இவற்றில், சில்வர் ஜரிகைதான் விலை அதிகமானது. சில்வர் மீது தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். சில்வர் ஜரிகை ஒரு கிராம் 45 ரூபாய் என்றால், ஆஃப் ஃபைன் ஜரிகை 3 ரூபாய்தான் இருக்கும். அதனால், என்ன வகையான ஜரிகை என்று கேட்டு வாங்க வேண்டும். நல்ல ஜரிகை உள்ள ஆஃப் ஃபைன் பட்டுப் புடவை 10 ஆயிரம் ரூபாய் என்றால், அதே அளவு சில்வர் ஜரிகை உள்ள பட்டுப் புடவை 70 ஆயிரம் ரூபாய் வரை ஆகலாம். புடவை முழுக்க ஜரிகை இருந்தால், மற்ற புடவையைக் காட்டிலும் விலை அதிகமாக இருக்கும். அதனால் ஜரிகை அதிகமிருந்தும் விலை குறைவாக இருக்க வாய்ப்பில்லை.

மத்திய அரசின் சில்க் மார்க் முத்திரை, ஹேண்ட்லூம் முத்திரை உள்ளிட்டவை இருக்கும் புடவைகளின் தரத்தை நம்பி வாங்கலாம். இவ்வளவும் கவனித்து, வாங்கிய புடவையை, யாரேனும் ‘விலை அதிகம் கொடுத்து வாங்கி ஏமாந்துவிட்டாய்’ எனச் சொனால், அதை நம்பி குழம்பிவிட வேண்டாம்.

மல்பெர்ரி, டஸ்ஸார், எர்ரி, மூகா என நான்கு வகையான பட்டுகள் இருக்கின்றன. இதில் மல்பெர்ரி வகை மட்டுமே, வளர்ப்பு முறையிலான பட்டுப் பூச்சிகளிலிருந்து எடுக்கப்படும் இழை. மற்றவை அடர்ந்த காடுகளில் உள்ள பட்டுப்பூச்சிகளிடமிருந்து கிடைக்கக்கூடிவை. தமிழகத்தைப் பொறுத்தவரை, மல்பெர்ரி வகை பட்டே விற்பனையில் கிடைக்கின்றன. மற்ற வகைகள் கிடைப்பது அபூர்வம் விலையும் அதிகம். பட்டு நூலை, எரிக்கும்போது, மெதுவாக எரிந்து, தானாக அணைந்துவிடும். முடி கருகும் வாசனை வரும். அதன் சாம்பல், கறுமையான நிறத்தில், உருண்டு பளிச்சென்று இருக்கும். விரலால் அழுத்தினால், தூள் தூளாகிவிடும்.

 

You Might Also Like

சிறுதானிய அடை! காலை உணவுக்கு ஆரோக்கியமான மாற்று

அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி

புத்தக கொள்முதல் முறைகேடு புகார் – தமிழகத்தில் விசாரணை கோரிக்கை தீவிரம்

நோயற்ற வாழ்வு வாழ வரம் தரும் வரகரிசியில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!

TAGGED:attentionPricesilk sareetraditionwomenகவனம்பட்டுப் புடவைபாரம்பரியம்பெண்கள்விலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

சிறுதானிய அடை! காலை உணவுக்கு ஆரோக்கியமான மாற்று

By Nagaraj 1 Min Read

கார்த்திகை தீபத்திற்கு பொரி உருண்டை! வீட்டிலேயே சுவையாக தயாரிக்கலாம்

By Nagaraj
சமையல் குறிப்புகள்

வாழைப்பழ கோதுமை அப்பம்! மாலை நேரத்தில் வீட்டிலேயே இனிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
ஆன்மீகம்

குருநானக் ஜெயந்தி நவம்பர் 24! பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சீக்கிய மதத்தின் முதல் குருவான குருநானக் தேவ் ஜியின் பிறந்தநாள் விழா நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை…

By Nagaraj
இந்தியா

சபரிமலை தரிசன முன்பதிவில் மோசடி? அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் தரிசன முன்பதிவு இடங்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. பயண நிறுவனங்கள்…

By Nagaraj
ஆன்மீகம்

குஜராத்தின் காசியாக ஹட்கேஷ்வர் கோவில்! காஞ்சி சங்கராச்சாரியார் கோரிக்கை

குஜராத்தில் உள்ள ஹட்கேஷ்வர் கோவிலை முக்கிய ஆன்மீகத் தலமாக மேம்படுத்த திட்டமிட வேண்டும் என்று காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் வலியுறுத்தியுள்ளார்.…

By Nagaraj
ஆன்மீகம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்! உச்ச நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி குறிப்பிட்ட தூணில்…

By Nagaraj
ஆன்மீகம்

இன்று விஸ்வேஸ்வர விரதம்! காசியில் சிவபெருமானை வழிபட பக்தர்கள் குவிந்தனர்

கார்த்திகை மாதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விஸ்வேஸ்வர விரதம் இன்று நவம்பர் 22ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சிவபெருமானின் விஸ்வேஸ்வர வடிவத்தை வழிபடும் இந்த…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?