By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரான்சில் போராட்டங்கள் குறித்து அதிபர் மேக்ரான் எச்சரிக்கை
    1 Min Read
    சூடானில் சந்தை மீது ட்ரோன் தாக்குதல்! 153 பேர் உயிரிழப்பு; அதிகரிக்கும் போர் பதற்றம்
    1 Min Read
    ரூ.30,213 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ இன்று தொடக்கம்! ஒரு பங்கின் விலை ரூ.1,119
    2 Min Read
    இந்தியாவின் வரலாற்றுப் பெருமைக்கு சர்வதேச அங்கீகாரம்! யுனெஸ்கோ பட்டியலில் சத்தீஸ்கரின் சிர்பூர்
    1 Min Read
    கனடாவை விட்டு பிரியும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரிவினை முயற்சிக்கு பின்னடைவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அரசியல் களத்தில் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து புதிய விவாதம்
    1 Min Read
    உலக விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தின் முத்திரை
    1 Min Read
    எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் 3,897 பதிவுகள் டார்க் வெப்பில் கசிவு! வங்கியின் தகவலால் அதிர்ச்சி
    1 Min Read
    சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் அழைப்பு!
    1 Min Read
    பிரதமரின் வெளிநாட்டுப் பயண விமான விவரங்களை வெளியிட முடியாது! டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மீட்புப் பணிகள் தீவிரம்!
    0 Min Read
    தமிழகத்தில் மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு: கலந்தாய்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு
    0 Min Read
    தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை
    1 Min Read
    வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: புயலாக மாறுமா?
    1 Min Read
    தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: வடகிழக்குப் பருவமழை தீவிரம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் படப்பிடிப்பு நிறைவு – விரைவில் டைட்டில், பர்ஸ்ட் லுக்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் படப்பிடிப்பு நிறைவு – விரைவில் டைட்டில், பர்ஸ்ட் லுக்!
சினிமா

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் படப்பிடிப்பு நிறைவு – விரைவில் டைட்டில், பர்ஸ்ட் லுக்!

Nagaraj
Last updated: August 31, 2026 7:38 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கர்நாடகா: சிவராஜ்குமார் மற்றும் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த். இதனைத் தொடர்ந்து ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ‘டூரிஸ்ட் பேமிலி’ தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் இணைந்து தயாரித்த ‘வித் லவ்’ திரைப்படம் காதலை மையமாகக் கொண்டிருந்தது. ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், நடிகர் ரஜினிகாந்திடமிருந்தும் பாராட்டுகளை பெற்றது.

அபிஷனுக்கு அப்பாவாக சிவராஜ்குமார்

அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் யோகலட்சுமி, கானா வினோத், நடிகை ஷிவானி நாகராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக, கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்துக்கு அப்பாவாக நடிக்கிறார். இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பின் அறிவிப்பு கிளிம்ஸ் வீடியோவும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு நிறைவு

டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து பணியாற்றிய இந்த பயணம் மகிழ்ச்சி, சகோதரத்துவம், காதல், சிரிப்பு மற்றும் தொடர்ச்சியான உழைப்பால் நிறைந்திருந்ததாகவும், இந்த நினைவுகளை எப்போதும் கொண்டாடுவோம் என்றும் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இதனிடையே ‘ஹார்ட் பீட்’ தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற நடிகை யோகலட்சுமி, வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

You Might Also Like

ஜெயிலர் 2 வசூல் சாதனை: முதல் வாரத்திலேயே ரூ.549 கோடி!

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு: திரையுலகில் பரபரப்பு

மோகன்லால் படத்தில் இணையும் வெளிநாட்டு நடனக் குழு

இளையராஜா இசையில் உருவாகும் புதிய திரைப்படம்

ஓடிடி ரசிகர்களின் கவனத்தை கவரும் ‘டோரதி’

TAGGED:AbishanJeevinthGauthamSivaramLeonJamesShivaniNagarajanYogalakshmiஅபிஷன் ஜீவிந்த்கெளதம் சிவராமன்சிவராஜ்குமார்யோகலட்சுமிலியோன் ஜேம்ஸ் Shivarajkumarஷிவானி நாகராம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

ஜெயிலர் 2 வசூல் சாதனை: முதல் வாரத்திலேயே ரூ.549 கோடி!

By Nagaraj 1 Min Read

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு: திரையுலகில் பரபரப்பு

By Nagaraj
விளையாட்டு

இந்தியாவின் சாதனை துரத்தல்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
தமிழகம்

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மீட்புப் பணிகள் தீவிரம்!

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் விவகாரம்: அரசியல் கட்சிகள் கவனம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற வாக்காளர்…

By Nagaraj
தமிழகம்

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு: கலந்தாய்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்பு சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். இடங்கள்…

By Nagaraj
தமிழகம்

தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை காரணமாக விவசாயப் பணிகளிலும் பொதுமக்களின் அன்றாடப் பயணங்களிலும் மழையின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. தஞ்சாவூர்,…

By Nagaraj
தமிழகம்

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: புயலாக மாறுமா?

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்தடுத்த நாள்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?