சென்னை: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஐ அம் கேம்’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் ரூ.20 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஆர்.டி.எக்ஸ்.’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைத்துள்ளனர்.
அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் மற்றும் ஜாம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு செப்டம்பர் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
படத்தின் ‘அருகே அருகே அவளும் வந்தாலே’ மற்றும் ‘லூசர்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், திரைப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.20 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது துல்கர் சல்மான் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
