By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
    போருக்கான கூடுதல் வருவாயை திரட்ட ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
    ரூ.1,322 கோடி கடன் மோசடி புகார்: ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா மீது சிபிஐ வழக்கு
    1 Min Read
    போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி: இளம்பெண் கைது
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை
    1 Min Read
    உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது சுண்டைக்காய்
    1 Min Read
    வெள்ளித் துகள்கள் கலந்த மண்ணைத் திருட முயற்சி: நீலகிரியில் 5 பேர் கைது
    1 Min Read
    திருப்பதி திருக்குடை பாதயாத்திரை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
    1 Min Read
    கைது நடவடிக்கையில் அரசியலமைப்பு விதிமுறைகள் கட்டாயம்: அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு விரைவில் சம்மன்?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு விரைவில் சம்மன்?
அரசியல் செய்திகள்

ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு விரைவில் சம்மன்?

Nagaraj
Last updated: September 8, 2026 10:22 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி அளவிலான ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, கே.என்.நேரு உள்பட 13 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 4-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கே.என்.நேருவின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 30 இடங்களில் கடந்த 5-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் 26 பக்கங்களில் பதிவு செய்துள்ள வழக்கு விவரத்தில், கே.என்.நேரு முதல் குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத், டி.வி.எச். கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த டி.ரமேஷ் மற்றும் டி.பிரபு உள்ளிட்டோரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோவை நகரமைப்பு முன்னாள் அலுவலர் ஆர்.சசிப்ரியா, திருப்பூர் மண்டல முன்னாள் பொறியாளர்கள் ஜி.பாலச்சந்திரன் மற்றும் ஜி.முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் ஜே.ஜே.எபினேசர் உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நீர் வழங்கல் துறைகளைச் சேர்ந்த அடையாளம் தெரியாத அதிகாரிகள், தனியார் நபர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

‘கட்சி நிதி’ என்ற பெயரில் டெண்டர் மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவி பிரசாத்தின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்கள், குறுந்தகவல் திரைப்பிடிப்புகள் மற்றும் டெண்டர் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

You Might Also Like

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு

தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைகொடுத்து தூக்கிவிட்ட முதல்-அமைச்சர் விஜய்: வீடியோ வைரல்

ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்ட விவகாரம்: விரைவில் விசாரணை நடத்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கருக்கு இதய அறுவை சிகிச்சை 

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25.16 ஏக்கரில் 15 அடுக்கு கட்டிடம்

TAGGED:Corruption CaseKN NehruSummons ActionTender InvestigationTender IrregularityVigilance Policeகே.என்.நேருசம்மன் நடவடிக்கைடெண்டர் முறைகேடுடெண்டர் விசாரணைரூ.1020 கோடி ஊழல் புகார்லஞ்ச ஒழிப்பு போலீஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?