ஜோத்பூர்: இந்திய விமானப்படையின் பிரம்மாண்ட பலதரப்பு கூட்டு விமானப்படைப் பயிற்சியான ‘தரங் சக்தி-2026’ ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தொடங்கியுள்ளது.
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியின் கருப்பொருள் “Power in Partnership” – “ஒத்துழைப்பில் வலிமை” என்பதாகும்.
இந்தப் பயிற்சியில் இந்திய விமானப்படையுடன் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 7 நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்கின்றன.
F-35, ரஃபேல், F-16, A400M, MRTT, C-130 உள்ளிட்ட பல்வேறு நவீன போர் மற்றும் போக்குவரத்து விமானங்கள் பயிற்சியில் இடம்பெறுகின்றன.
பல நாடுகளின் விமானப்படைகள் ஒரே நேரத்தில் இணைந்து செயல்படுவதன் மூலம் வான்போர் நடவடிக்கைகள், விமானப் பாதுகாப்பு, உளவு மற்றும் கண்காணிப்பு, வான்வழி எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
2024-ல் நடைபெற்ற முதல் ‘தரங் சக்தி’ பயிற்சியைத் தொடர்ந்து, தற்போது 2-வது பதிப்பு நடைபெறுகிறது.
