சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) நடைமுறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் தகுதி பெற்ற இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதன் முடிவில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், புதிதாக தகுதி பெற்ற இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் புதிதாக வாக்காளர் தகுதி பெற்றவர்கள் உரிய நடைமுறையின் மூலம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள இந்த முகாம்கள் உதவியாக இருக்கும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, SIR பணிக்குப் பிறகு விடுபட்ட வாக்காளர்களை தொடர்ந்து திருத்த நடைமுறையின் மூலம் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
