இந்திய திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக 94 வயதில் காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனித்துவமான படைப்புகளை வழங்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். வித்தியாசமான கதை சொல்லும் பாணி, நகைச்சுவை மற்றும் பரிசோதனை முயற்சிகளால் தனக்கென தனி இடத்தை உருவாக்கினார்.
அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தன்னை செதுக்கியவர்களில் சிங்கீதம் சீனிவாச ராவும் ஒருவர் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் ஒரு முக்கியமான படைப்பாளியை திரையுலகம் இழந்துள்ளது.
