2026-ம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான காலகட்டமாக அமைய உள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் முன்னணி நடிகர்களின் பல்வேறு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ரஜினிகாந்த், அஜித், சூர்யா, தனுஷ், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
அக்டோபர் மாதத்தில் ‘ஜெயிலர் 2’, ‘ஏழு கடல் ஏழு மலை’, ‘அன்பில் அவன்’ உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றுள்ளன.
நவம்பர் மாதத்தில் ‘காட்சி’, ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘போராளிகள்’, ‘ஓம்’, ‘மைசா’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதத்திலும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் களமிறங்க உள்ளதால், இந்த ஆண்டின் கடைசி காலாண்டு திரையுலகிற்கு வசூல் ரீதியாகவும் முக்கியமானதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
