இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தற்போது தேக்கநிலையை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் சந்தை அணுகல், வர்த்தக சமநிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடவடிக்கைகளும் பேச்சுவார்த்தையில் அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதும் அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் சூழல் இல்லை என்று அமெரிக்க தரப்பும் கூறியுள்ளது.
