இந்தியாவின் செப்டம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 9.1 சதவீத வளர்ச்சி ஆகும்.
பண்டிகை கால விற்பனை அதிகரிப்பு, உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் மின்னணு வரி கண்காணிப்பு உள்ளிட்ட காரணிகள் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்புக்கு உதவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து ஜிஎஸ்டி வசூல் வலுவாக இருப்பது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக இருப்பதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசின் வருவாய் நிலைக்கும் இது சாதகமான செய்தியாக அமைந்துள்ளது.
