ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 150 பேர் இந்திய விமானப்படை விமானம் மூலம் ஜம்மு-காஷ்மீரிலிருந்து பாக்டோக்ராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சுமார் 500 பேர் சட்டவிரோத குடியேறிகளாக இருக்கலாம் என போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
அவர்களின் குடியுரிமை மற்றும் ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
