குளிர்காலம் நெருங்கும் நிலையில் கருங்கடல் பகுதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக துருக்கி எச்சரித்துள்ளது.
வர்த்தகக் கப்பல்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிதான் தெரிவித்துள்ளார்.
கருங்கடல் மீண்டும் மிகப்பெரிய போர் மண்டலமாக மாறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தானிய ஏற்றுமதி உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துருக்கி இரு தரப்புடனும் ஆலோசித்து வருகிறது.
