போபால்: மத்தியப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை உயர்த்திய நடவடிக்கையை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இடஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கையை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இடஒதுக்கீட்டை 50 சதவீத வரம்பை மீறி உயர்த்துவதற்கான போதிய சட்டப்பூர்வ அடிப்படையை மாநில அரசு நிறுவவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அரசுப் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை மூன்று மாதங்களுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில், 2019 மார்ச் முதல் 2022 செப்டம்பர் 29 வரையிலான காலகட்டத்தில் உயர்த்தப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஓபிசி பிரிவினரின் பணிநியமனங்களுக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு இடஒதுக்கீடு தொடர்பான விவாதத்தை மீண்டும் தேசிய அளவில் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
