சென்னை: விஷ்ணு விஷால், மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள இரண்டு வானம் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ராம் குமார் இயக்கியுள்ள இப்படம் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தேதியில் படம் வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
படத்தை அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்குவதற்கும் ஏற்ற தேதியைத் தேர்வு செய்து வருவதாகத் தயாரிப்புத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
புதிய வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விஷ்ணு விஷால் – ராம் குமார் கூட்டணியில் ஏற்கெனவே வெளியான முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்கள் கவனம் பெற்றதால், இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.
