புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கூடுதல் லாப வரியை விதித்துள்ளது. இந்த வரி அக்டோபர் 16 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, பெட்ரோல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.2.50-ம், டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.8.50-ம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியில் கிடைக்கும் கூடுதல் லாபத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த வரி, எரிபொருள் ஏற்றுமதி நிறுவனங்களின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நடவடிக்கை மட்டும் உள்நாட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறிக்காது.
