சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் திரைப்படம் ‘டேர் டெவில்’. அஜித்தின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை அவரது மனைவி ஷாலினி தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தற்போது அவருக்குப் பதிலாக ‘மார்கோ’ படத்தின் மூலம் கவனம் பெற்ற உன்னி முகுந்தன் நடிக்கலாம் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.
மேலும், கன்னட நடிகர்கள் கிச்சா சுதீப், உபேந்திரா உள்ளிட்டோருடனும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் நடிகர் பட்டியல் குறித்த அறிவிப்பை அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
