புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி 16வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரி சட்டமன்றத்தில் 16-ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த சபாநாயகர் செல்வம், தீர்மானம் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.