திருமலை திருப்பதி தேவஸ்தானம் நவம்பர் மாதத்திற்கான முக்கிய ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் உற்சவ நாட்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 13ஆம் தேதி நாகுல சவிதி மற்றும் பெரிய சேஷ வாகன சேவை நடைபெறுகிறது. நவம்பர் 14ஆம் தேதி சேனை முதலியார் வருட திருநட்சத்திரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
நவம்பர் 15ஆம் தேதி வருடாந்திர புஷ்பயாகத்திற்கான அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. நவம்பர் 16ஆம் தேதி ஸ்ரீவாரி புஷ்பயாகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகளின் காரணமாக திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள் முன்பதிவு, தரிசன நேரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான தேவஸ்தான அறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக முக்கிய உற்சவ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
