தேவை:
சோள மணிகள்- 2 கப்
உளுந்தம்பருப்பு- 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிது
துருவிய தேங்காய் – கால் கப்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும். சோளக் கருவை தனித்தனியாக ஆவியில் வேக வைத்து ஆறவிடவும். பிறகு அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து, துருவிய தேங்காய் துருவலைக் கலந்து, சிறு உருண்டைகளாக அரைக்கவும். இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் தோய்த்து, கடாயில் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான சோளம் போண்டா ரெடி .