உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதள சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. உதய்பூரில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சக மாணவன் கத்தியால் குத்தியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தாக்கிய மாணவனும், தாக்கப்பட்ட மாணவனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சமூக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு கார்களுக்கு தீ வைக்கப்பட்டது. பல வாகனங்கள் கற்களால் தாக்கப்பட்டன. பதற்றம் காரணமாக உதய்பூரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால் மீது கல் வீசப்பட்டதில் பல கடை ஜன்னல்கள் சேதமடைந்தன. தவறான தகவல் பரவுவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
மாணவி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை அருகே ஏராளமானோர் திரண்டதையடுத்து, போலீஸார் அவர்களைக் கலைத்தனர். என்ன நடந்தது? உதய்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்டான். பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கு ஆதரவாக பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டதை அடுத்து அது வன்முறையாக மாறியது.
இது தொடர்பாக உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் போஸ்வால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காலை வேளையில் இரண்டு சிறுவர்களுக்கு இடையே சண்டை நடந்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு சிறுவனின் தொடையில் மற்றொரு சிறுவன் கத்தியால் குத்தினான். காயம் ஆழமாக இருந்தது. சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். நான் பையனை சந்தித்தேன். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. கத்தியால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத ஆயுதம் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது,” என்றார்.