சென்னை: அனைவர் வீட்டிலும் பிரிட்ஜில் கட்டாயம் இடம் பெறும் பொருள் முட்டைதான். விலை குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் ஒரு டஜன் வாங்கி பிரிட்ஜில் வைத்து விடுவோம்.
ஆனால் அப்படி முட்டைகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்து அதிர்ச்சியை கிளப்புகிறது. இந்த முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகும் அபாயம் உள்ளது.
கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உருவாகும். இவ்வாறு பாக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம். பாக்டீரியா வளர வேண்டிய தட்ப வெப்ப நிலையை பிரிட்ஜ் தருகிறது.
சாதாரண அறை வெப்பத்தில் (37டிகிரி) இந்த பாக்டீரியா இனப்பெருக்கம் செய்ய முடியாமல் இறந்துவிடும். ஆனால் அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருகுகின்றன.
வாரக்கணக்கில் காய்கறிகளை வாங்கி ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. ப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். கர்ப்பிணிகள், கீமோதெரபி எடுத்துக் கொள்பவர்கள், ஹெச்ஐவி வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள் பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது. எனவே முட்டைகளை டஜன் கணக்கில் வாங்கி அடுக்கி வைப்பதை தவிர்த்து தேவைப்படும் போது தேவையான அளவு வாங்கி உடனே உபயோகிப்பதே நல்லது.