சென்னை: சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் அதிநவீன காற்றழுத்த ஆய்வகம் மற்றும் கருவிப் பெட்டிகளின் கிடங்கு ஆகியவை சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையின் பராமரிப்பு பிரிவில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, ஆலோசகர் ராமசுப்பு, முதன்மை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, “ரயிலின் காற்றழுத்தத்தை ஆய்வு செய்து சரிசெய்யும் வசதி இந்த ஆய்வகத்தில் உள்ளது. கருவி தொகுப்புகளின் கிடங்கு திறமையான பராமரிப்பு செயல்பாடுகளை மேம்படுத்தும். இந்த உள் கட்டமைப்பு பராமரிப்பு செலவுகளை குறைக்கும் மற்றும் புதுமைகளை வளர்க்க உதவும்.