கொழும்பு: வர்த்தமானி வெளியாகிறது… செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய தொகையை குறிப்பிடும் வர்த்தமானி ஒன்று வெளியாகவுள்ளது.
குறித்த வர்த்தமானி இன்று (19) வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் வேட்பாளர்கள் ஐம்பது சதம் முதல் 1000 ரூபா வரையிலான பெறுமதியின் கீழ் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
வேட்புமனுக்கள் பெறப்பட்ட பின்னர்
தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, ஒரு வாக்காளருக்குச் செலவிட அனுமதிக்கப்பட்ட தொகை, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து முடிவெடுப்பதற்காக வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது வேட்பாளர்கள் ஐம்பது சதம் முதல் 1000 ரூபா வரையிலான பெறுமதியின் கீழ் கோரிக்கைகளை முன்வைத்ததாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி இன்று (19) வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.