சென்னை: அமைச்சர் ஏ.வி.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தின் முதல் பிரதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொள்கிறார்.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வி.வேலு, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவுகளை ‘கலைஞா எனும் தாய்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 24-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் புத்தகத்தின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றுகிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம் ஆகியோர் ஆய்வுரை வழங்குகின்றனர். நூலை எழுதிய அமைச்சர் வேலு ஏற்புரை ஆற்றுகிறார். சீதா பதிப்பகத்தின் கவுரா ராஜசேகர் நன்றி கூறினார்.