தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 202 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை தஞ்சாவூர் எம்.பி., முரசொலி வழங்கினார்.
தஞ்சாவூர் அருகே மருங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏவும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தலைமை வகித்து தஞ்சாவூர் எம்.பி., முரசொலி 102 மாணவர்கள், 100 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய துணைப் பெருந்தலைவர் அருளானந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஒன்றியக்குழு தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன், மாவட்ட பிரதிநிதிகள் சொக்கர், அகிலன், ஒன்றியக்குழு உறுப்பினர் அறிவுடைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.