சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கியமான நிகழ்வொன்றில் பங்கேற்றார். புலனாய்வு மற்றும் தீயணைப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை மற்றும் தமிழ்நாடு முதல்வர் பதக்கங்களை வழங்கி அவர்களை சிறப்பித்தார்.
இந்த நிகழ்வு, சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், பொறுப்பான காவல்துறை அதிகாரிகளை எளிமையாக பாராட்டினார். நிகழ்வில் தமிழ்நாடு காவல்துறை கமிஷனர் அருண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் பிற உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பாக சேவை செய்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவதது வழக்கம். இவ்வாறு, தமிழ் நாட்டிலும், ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்களை வழங்கி, பணியாற்றிய அதிகாரிகளை போற்றும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டன.