பழநி: உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் இன்று காலை தொடங்கியது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா தொடங்கியதும் மாநாட்டுக்கான 100 அடி உயர கொடி கொம்பில் ஏற்றப்பட்டது. மஞ்சள் கொடியில் முருகன் முத்தமிழ் மாநாடு என்ற வாசகம் இருந்தது.
மாநாடு நடைபெறும் இடமான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளால் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய மாநாடு நாளை வரை நடைபெறுகிறது.
மாநாட்டில் தமிழக அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். முருக வழிபாட்டின் சிறப்பை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் 1,300 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுக்கான பிரமாண்ட அரங்கம் 2,000க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி அரங்குகளில் முருகனின் சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் 4 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு திருப்பதி, முருகன் பிரதமன பாயசம் மற்றும் பல வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.முதல்வர் ஸ்டாலின், இந்த மாநாட்டை காணொலி வாயிலாக தொடங்கி, சிறப்புரை ஆற்றினார்.