புதுடில்லி : ராகுலுக்கு பதிலடி… மிஸ் இந்தியா அழகி போட்டிகளில் தலித் மற்றும் ஆதிவாசிகள் இடம்பெறுவதில்லை என ராகுல் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் கிரண் ரிஜூஜூ ராகுலுக்கு ‘ பால் புத்தி’ என கூறினார்.
உ.பி.,மாநிலத்தில் பிரயாகராஜில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி சம்விதான் சம்மான் சம்மேளனம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 90 சதவீதம் மக்கள் பங்கேற்காமல் இந்தியா சிறப்பாக செயல்பட முடியாது.
தலித் ,ஆதிவாசி (பழங்குடியினர்)மற்றும் ஓ.பி.சி பிரிவுகளில் பெண்கள் இல்லாத மிஸ் இந்தியா பட்டியலை பார்த்தேன். சிலர் கிரிக்கெட் அல்லது பாலிவுட் பற்றி பேசுவார்கள், செருப்பு தைக்கும் தொழிலாளியையோ, பிளம்பர்களையோ யாரும் காட்டமாட்டார்கள் ஊடகங்களில் முன்னணி அறிவிப்பாளர்கள் கூட 90 சதவீதத்தினர் இல்லை.
90ச தவீதத்தில் இருந்து எத்தனை நிறுவனங்கள் கார்ப்பரேட்கள், பாலிவுட், மிஸ் இந்தியா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம் என்றார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் எதிர்கட்சி தலைவர் உண்மையை சரிபார்க்க வேண்டும். ஜனாதிபதி முர்மு பழங்குடியினத்தவர், பிரதமர் மோடி ஓ.பி.சி., பிரிவை சேர்ந்தவர். மேலும் பட்டியல் சாதிகள், பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர்.
அரசுகள் மிஸ் இந்தியாவை, ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்களை , திரைப்படங்களுக்கு நடிகர்களை தேர்ந்தெடுப்பதில்லை. ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., கேபினட் அமைச்சரவையில் எஸ்.சி.,எஸ்.டி, பிரிவினரின் எண்ணிக்கையை அவரால் பார்க்க முடியவில்லை,
இது ராகுலின் ‘பால் புத்தி’யை வெளிக்காட்டுகிறது. குழந்தைத்தனமான புத்திசாலிதனம் பொழுது போக்கிற்கு நல்லதாக இருக்கலாம். உங்கள் பிரித்தாளும் தந்திரங்களில் பின்தங்கிய சமூகங்களை கேலி செய்யாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.