திருக்கோகர்ணம்: விதியை மீறி மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை இந்து அமைப்பினர் வழிமறித்தனர். இதில் தாமதமாக வந்ததாக போலீசாருடன் வாக்குவாதமும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையம் அருகே கேரளா மாநிலத்திற்கு இறைச்சிக்காக விதியை மீறி 40க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதாக லாரி ஒன்றை இந்து அமைப்பினர் வழிமறித்து நிறுத்தி, காவல்துறையினிடம் ஒப்படைத்தனர்.
தகவல் அளித்தும் காலதாமதமாக வந்ததாக காவல் துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.