தென்காசி: பூலிதேவரின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஆட்சேபகரமான வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 பேருக்கு மேல் கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாமனார் பூலித்தேவரின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் நாளை (ஆகஸ்ட் 31) மாலை 6 மணி முதல் செப். 2-ம் தேதி காலை 10 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 163 (1) பிரிவின்படி ஊரடங்கு உத்தரவு வரும் 2-ம் தேதி காலை 10 மணி வரை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு உத்தரவுப்படி 4 பேருக்கு மேல் கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.