இஸ்லாமாபாத்: கடன் வாங்கியிருக்காங்க… ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் ஹாக்கி அணி கடன் வாங்கி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் அணியின் தேசிய விளையாட்டாக ஹாக்கி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இதுவரை ஒலிம்பிக் போட்டியில் 3 முறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளது. தற்போது பாகிஸ்தான் ஹாக்கி அணி கடும் நிதி சிக்கலில் இருந்து வருகிறது.
இதற்கிடையே, ஆசிய சாம்பியன் கோப்பை அடுத்த மாதம் சீனாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட கடனில் வாங்கிய டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்டி கூறுகையில், இந்த தேசிய விளையாட்டிற்கு உரிய அந்தஸ்தும் மரியாதையும் ஹாக்கிக்கு வழங்கப்படவில்லை. இப்போது தேசிய விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வளர்ந்து வரும் நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில், நாட்டின் ஹாக்கி திட்டத்தை புதுப்பிக்க சிறப்பு மானியம் வழங்கவேண்டும் என பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் வலியுறுத்தி உள்ளார்.