சென்னை: உடற்பயிற்சியும் உணவுப் பழக்கவழக்கங்களுமே இயற்கையாக இளமையுடன் வைத்திருக்க உதவும். உடலுக்கு ஊட்டச்சத்தில்லாத உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டாலே ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இளமையாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்: முட்டை – இதில் புரோலின், லைசின், அமினோ அமிலங்கள் உள்ளது. மீன் குறிப்பாக சாலமன், மாக்கேரல், டூனா மீன்கள் – ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்தது.
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள். ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, பிளாக் பெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகைகள். கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள். குடை மிளகாய் – வைட்டமின் சி நிறைந்தது. அவோகேடா பழங்கள் – வைட்டமின் இ, சி உள்ளது. பாதாம், வால்நட் உள்ளிட்ட நட்ஸ் மற்றும் சியா, பிளக்ஸ் விதைகள்
சோயா நிறைந்த உணவுகள். இந்த உணவுகள் அனைத்துமே ‘கொலாஜன்’ என்ற புரோட்டீன் நிறைந்தது. இவை சருமம் வயதாவதைத் தடுத்து இளமையுடன் வைத்திருக்க உதவுகின்றன.