புதுடெல்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறியதாவது:-
நாட்டில் இளைஞர்களின் தற்கொலை விகிதம் அதிகரித்து வருவது மிகவும் வருத்தமும், கவலையும் அளிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், 0-24 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 58.2 கோடியில் இருந்து 58.1 கோடியாக குறைந்துள்ள நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை 6,654ல் இருந்து 13,044 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இன்று அதிக இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களுக்கு வசதிகளை வழங்குவதற்குப் பதிலாக அவர்கள் சிரமங்களையும் நிர்ப்பந்தங்களையும் எதிர்கொள்வது வருந்தத்தக்கது.
நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் – பிரச்சனைகளுக்கு எதிராக குரல் எழுப்புங்கள், பயப்பட வேண்டாம். உங்களுக்காக வீதிகள் முதல் பாராளுமன்றம் வரை தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு கூறினார்.