திருவனந்தபுரம்: பாலேரி மாணிக்கம் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் ரஞ்சித் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேற்கு வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா கொச்சி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இயக்குனர் ரஞ்சித் மீது சில நாட்களுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் கேரள சினிமா அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞரும் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பட வாய்ப்பு கேட்க வந்த இயக்குனர் ரஞ்சித் தன்னை பெங்களூருவில் உள்ள ஹோட்டலுக்கு வரவழைத்து நிர்வாணமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது நிர்வாண படங்களை நடிகை ரேவதிக்கு அனுப்பியதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வாலிபரின் புகாரின் பேரில் இயக்குனர் ரஞ்சித் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகை ரேவதி ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
என்னையும் இயக்குனர் ரஞ்சித்தையும் இணைத்து வரும் செய்திகள் குறித்து கேள்விப்பட்டேன். ஆனால் ரஞ்சித் எனக்கு அப்படி எந்த புகைப்படமும் அனுப்பவில்லை. எனவே இது குறித்து நான் கருத்து சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீகுமார் மேனன், பல வணிகப் படங்களுக்குப் பிரபலமானவர். இவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ஒடியன் படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் அவர் மீது பாலியல் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளம்பரப் படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள இளம் நடிகை ஒருவர் கொச்சி காவல்துறையில் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார்.
இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீது கொச்சி மரடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.