தேவையானவை:
ஆரஞ்சு சிவப்பு நிறம் – ஒரு சிட்டிகை
இட்லி – 5
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
சோள மாவு – ஒரு தேக்கரண்டி
கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
சீரகப் பொடி – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லியை நீளவாக்கில் நறுக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது, சோள மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், சிவப்பு கலர், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, அதில் கலந்து வைத்திருக்கும் இட்லிகளை ஐந்து பாகங்களாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான காரமான இட்லி மஞ்சூரியன் தயார்.