மதுரை: தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைதான் அதிகளவில் வந்து செல்லும் மருத்துவமனையாகும்.
மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு, ஏப்.,30-ல் ஓய்வு பெற்றார். இன்னும் புதிய டீன் நியமிக்கப்படவில்லை. டீனாக நியமிக்கப்பட்ட பேராசிரியர் தர்மராஜும் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
தற்போது பேராசிரியை செல்வராணி இருதய சிகிச்சை துறைக்கு டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களாக மருத்துவமனை நிர்வாகத்தை பொறுப்பு டீன் கையாண்டார். இதேபோல் தமிழகத்தின் பல பெரிய மருத்துவமனைகளில் டீன் பணியிடம் காலியாக உள்ளது.
மருத்துவ துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள, 37 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி உட்பட, 14 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், ‘டீன்’ பணியிடம் காலியாக உள்ளது.
இந்தப் பணியிடங்கள் தற்போது ‘இன்-சார்ஜ்’ டீன்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களை நிரப்ப தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், உயர்நிலையில் யாரும் இதில் ஆர்வம் காட்டாததால், தகுதி பட்டியல் தயாரிப்பு பணி மந்தமாக நடந்து வருகிறது.
இந்த பட்டியலில் தேவையான நபர்களை உள்ளிட முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்ல முடியவில்லை.
அமைச்சரும் செயலாளரும் விரும்பினால், தகுதிப் பட்டியலை இறுதி செய்து அன்றே டீன்களை நியமிக்கலாம். அரசு மருத்துவமனைகளில் நிரந்தர டீன் இருந்தால் தான், மூத்த பேராசிரியர்கள், டாக்டர்களை கட்டுப்படுத்தி, நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் சங்குமணியிடம் கேட்டபோது, ””டீன்’ பணிக்கான தகுதி பட்டியல் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகிவிடும். பின்னர், காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய டீன்கள் நியமிக்கப்படுவார்கள்.
நிரந்தர டீன் இல்லாவிட்டாலும், அனுபவம் வாய்ந்த மூத்த பேராசிரியர்களை பொறுப்பு டீன்களாக நியமித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் சுமுகமாக நடந்து வருகிறது.