நிஜாமாபாத் மற்றும் கமரெட்டி மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து, அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக கோதாவரி மற்றும் அதன் கிளை நதியான மஞ்சிரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகள், ஓடைகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்படும் சவால்களை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் ராஜீவ் காந்தி ஹனுமந்து, நிஜாமாபாத் மற்றும் காமரெட்டி பகுதிகளில் நிலவரத்தை ஆய்வு செய்து, மழையின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிஜாமாபாத் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசைப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழையின் தாக்கத்தால் மாவட்டத்தில் மக்களின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளன.