சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது.
சாம்பார் வெங்காயம் ரூ.20, தக்காளி ரூ.12. தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் துவங்கினாலும், தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் மாதத்தில்தான் தீவிரமடைந்தது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்து, அவற்றின் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக முட்டை கோஸ் விலை ரூ.5 ஆக குறைந்துள்ளது. கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கை, பீட்ரூட், முள்ளங்கி, புடலங்காய் தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் ரூ.30 ஆக குறைந்திருந்த சாம்பார் வெங்காயம் தற்போது கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலை ரூ.12 ஆக குறைந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.