வேலூர்: அதிரடி செய்த கலெக்டர்… மனு அளித்த 5 நாட்களில் வேலூர் கலெக்டர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு காது கேட்கும் கருவி கிடைத்துள்ளது.
மனு அளித்த 5 நாட்களில் காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவனுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி காது கேட்கும் கருவியை வழங்கினார்.
சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சாதிக் என்பவரது மகன் முகமது தாரிக் தைராய்டு பிரச்சனையால் கேட்கும் திறனை இழந்த நிலையில் நடைபெற்ற மனு குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி காது கேட்கும் கருவியை வழங்கினார்.
இவர் மனு கொடுத்த 5 நாட்களுக்குள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கலெக்டர் காது கேட்கும் கருவியை வழங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.