சென்னை: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. செயல்தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் 5 பேர் கொண்ட தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளார்.
தி.மு.க. பொதுச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க.வில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள தி.மு.க. தலைவர் மற்றும் தலைமைக்கு பரிந்துரை செய்தல், கட்சி நிர்வாகிகளின் புகார்களை விசாரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள இந்தக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை அமைப்பு ரீதியாக தீர்க்கும் வகையில், மேலும் மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள, இந்த குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்புக் குழு ஏற்கனவே இளைஞர் மற்றும் மகளிர் அணியுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை மீண்டும் தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் வழக்கறிஞர்கள் சங்கம், தொழிலாளர் சங்கம், இலக்கிய சங்க மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கட்சி நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.
அணிகளின் செயல்திறன் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அணியினர் கருத்துகளையும் கேட்டறிந்தனர். அப்போது நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.