சென்னை: அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து பேசினார்.
பின்னர் செல்வபெருந்தகை அளித்த பேட்டி:-
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. இதற்கு ஒருபோதும் அனுமதி பெற வேண்டாம். எந்த ஆட்சியிலும் அனுமதி வழங்க வாய்ப்பில்லை.
மேகதாது பேசுவதை விட்டுவிட்டு வேறு ஏதாவது பேசுவோம். மேகதாதுவில் அணை கட்ட தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல்லையும் எடுத்து வைக்க முடியாது.
நமது உரிமைகளை காங்கிரஸ் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.