சென்னை: பைலட்டின் அட்டகாச செயல்… இந்தியிலும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என விமான பயணி ஒருவர் பைலட்டிடம் கூறினார். இதனையடுத்து தடாலடியாக பைலட் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சென்னையில் இருந்து மும்பைக்கு தனியார் நிறுவனமான இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. வழக்கம் போல் பயணிகளுக்கு தமிழில் அறிவிப்பு வழங்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இந்தியிலும் அறிவிப்பை வழங்க வேண்டும் என கூறினார். பயணியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ,பைலட் பிரதீப் கிருஷ்ணன் தடாலடியாக இந்தியிலும் அறிப்பை வழங்கினார்.
“நமஸ்கார், மேரா நாம் பிரதீப் கிருஷ்ணன் ஹை. மேரா பர்ஸ்ட் ஆபிசர் கா நாம் பாலா ஹை. ஹமாரா லீட் கா நாம் பிரியங்கா ஹை. ஹம் ஆஜ் சென்னை சே மும்பை ஜாயேங்கே, 35,000 மே உதயேங்கே, புரா கி தூரி 1,500 கிமீ ஹை, புரா கா சமய் ஏக் கண்டா ஏக் காண்டே டீஸ் மினிட் ஹை, ஜானே கே டர்புலன்ஸ் ஹோகா, ஹம் சீட் பெல்ட் தாலேங்கே, மெயின் பி தாலேங்கே. தன்யாவத் (வணக்கம், என் பெயர் பிரதீப் கிருஷ்ணன். எனது முதல் அதிகாரி பாலா. எங்கள் தலைவரின் பெயர் பிரியங்கா. நாங்கள் சென்னையில் இருந்து மும்பைக்கு 35,000 அடி உயரத்தில் 1,500 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்களில் கடக்கிறோம்.சீட் பெல்ட் அணிவோம். நானும் அணிவேன் .நன்றி) ” என்றார்.
இச்சம்பவம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து பைலட், பிரதீப் கிருஷ்ணன் இந்தி மொழியில் பயணிகளுடன் இணையும் இலகுவான முயற்சி, அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றதோடு மட்டுமல்லாது, பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைத் தழுவியதன் அழகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்ற வரிசையில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.