மதுரை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. எஸ்பி வருண்குமார் அளித்த புகாரின் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து துரைமுருகன் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அநாகரிகமான வார்த்தைகளில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.