வேலூர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 19 வயது செவிலியர் மாணவியை பயிற்சிக்கு அனுப்பியபோது, எலும்பு முறிவு மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் பாபு, மாணவியின் கையைப் பிடித்து இழுத்து அநாகரீகமாகவும், வக்கிரமாகவும் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் ஆகஸ்ட் 30ம் தேதி நடந்தது.உடனடியாக மாணவி அலறியதால் டாக்டர் பாபு கைவிட்டார். இது குறித்து மாணவி கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி குடியாத்தம் போலீசில் புகார் செய்தார்.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் டாக்டர் பாபு உடனடியாக கைது செய்யப்படவில்லை. இதனால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீண்ட போராட்டங்களுக்கு பிறகு டாக்டர் பாபு சரண் அடைந்து தற்போது வேலூர் சிறையில் உள்ளார்.