சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை:-
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 2014-ல் பதவி விலகும்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக இருந்தது.
அப்போது பெட்ரோல் ₹72-க்கும், டீசல் ₹50-க்கும் விற்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவு 70 டாலராக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்.
ஆனால் இன்று பெட்ரோல் விலை ₹100.85 ஆகவும், டீசல் விலை ₹92.34 ஆகவும் உள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.