தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு 1
பெரிய வெங்காயம் 1
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
1/2 கப் தண்ணீர்
சுவைக்கு உப்பு
அரைக்கவும்:
பெரிய வெங்காயம் 1
தக்காளி 2
பூண்டு 4 பற்கள்
சிவப்பு மிளகாய் 2
தாளிக்க:
சமையல் எண்ணெய் 1/2 டீஸ்பூன்
எள் 1/2 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
வெந்தயப் பொடி ஒரு சிறிய சிட்டிகை
செய்முறை
வெங்காயம், தக்காளி, கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் அரைத்து, மிளகாய்த்தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கடாயை மூடி கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த தண்ணீர் நன்கு வடிந்ததும் மசாலா வாசனை போனதும் மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தனியா, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து உருளைக்கிழங்கு கலவையில் கிளறவும். சுவையான உருளைக்கிழங்கு சட்னி தயார். இது சப்பாத்தி, பூரி, தோசை, தயிர் சாதம், சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.