புதுச்சேரி: நாடகத்தின் தந்தை என போற்றப்படும் தவத்திரு சங்கரதாசு சுவாமிகளின் 157-வது பிறந்தநாளையொட்டி, கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்துள்ள நினைவிடத்தில் தமிழ் அமைப்புகள் சார்பில் இன்று (செப்டம்பர் 7) மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். நிகழ்ச்சிக்கு ரேட் அறக்கட்டளை தலைவர் பொறியாளர் இரா.தேவதாசு தலைமை வகித்தார்.
அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் (எ) தட்சணாமூர்த்தி கலந்து கொண்டு சுடுகாட்டில் உள்ள சங்கர தாசர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், வேதி தமிழ் சமரவாத் தலைவர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சங்கர தாசருக்கு பாவரங்கத்தை தலைமை தாங்கினார். இதில் 15 பாவாலைகள் கலந்து கொண்டு பாமாலை ஏற்றினர். தமிழ் அமைப்புகள் சார்பில் சங்கர தாசர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.