லக்னோ: ஹர்மிலாப் கட்டிடம் என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம், மருத்துவ பொருட்கள் வணிகத்திற்கான குடோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கட்டிடம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரும், லக்னோ மக்களவை உறுப்பினருமான ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“லக்னோவில் கட்டிடம் இடிந்து விழுந்த செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இதுகுறித்து, லக்னோ மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசி, தகவல் கேட்டேன்.
உள்ளூர் நிர்வாகம் அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
“இந்த கட்டிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சனிக்கிழமை சில கட்டுமானப் பணிகள் நடந்தன. இந்த நிலையில்தான் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்” என்று மாவட்ட நீதிபதி சூர்யபால் கங்வார் கூறினார்.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.